வடபகுதி கடற்தொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி, பிரதமரை விரைவில் சந்தித்துப் பேச்சு!
Friday, July 15th, 2016
வடபகுதி கடற்தொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் விரைவில் ஜனாதிபதி, பிரதமரைச் சந்தித்து இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசவுள்ளனர்.
குறித்த சந்திப்புத் தொடர்பில் ஆராய்வதற்கான எதிர்வரும்- 21 ஆம் திகதி கடற்தொழில் அமைச்சின் மண்டபத்தில் இடம்பெறும் கூட்டத்தில் வடமாகாணத்தின் மீனவ சங்கப் பிரதிநிதிகளைக் கலந்து கொள்ளுமாறு யாழ். மாவட்ட கடற்தொழில் கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது வடபகுதி கடற்தொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் வட, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஆகியோரும் ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்திப்பதற்கான ஒழுங்குகளை கடற்தொழில் அமைச்சர் மேற்கொண்டு வருவதாகத் தெரிய வருகிறது.
Related posts:
தனித்து விடப்பட்ட தீவக மக்களின் காப்பரணாக வந்தவர் யார்? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன...
பிரசர் கருவிகள் பற்றாக்குறை: சாவகச்சேரி மருத்துவமனையில் நோயாளர்கள் அவதி!
மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!
|
|
|


