உள்ளூராட்சி தேர்தல்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை திகதி அறிவிப்பதற்கு சட்டரீதியான தடை – தேர்தல்கள் ஆணைக்குழு!
Monday, December 23rd, 2024
…….
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு சட்டரீதியான தடை நிலவுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க –
தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதத்துக்குள் திருத்தம் மேற்கொள்ளப்படும் என பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
000
Related posts:
புதிய அமைச்சுக்கள் சிலவற்றின் விடயதானங்கள் வர்த்தமானியில்
விளையாட்டுத் துறையை மேம்படுத்த பிரதமர் விளையாட்டு நிதியம்!
பிலிப்பைன்சை மிரட்டிய டிராமி புயல் - 65 பேர் உயிரிழப்பு!
|
|
|


