வடபகுதியில் பயிர்செய் நிலங்களில்வளர்ந்துள்ளபாத்தீனியச் செடிகளால் விவசாயிகளும்,கால்நடைவளர்ப்போரும் பாதிப்பு!

Wednesday, June 7th, 2017

 

வடபகுதியில் பயிர்செய் நிலங்களிலும் ஏனையபகுதிகளிலும்வளர்ந்துள்ளபாத்தீனியச் செடிகளால் விவசாயிகளும்,கால்நடைவளர்ப்போரும் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியாமாவட்டத்தின் சிலபகுதிகளிலும் யாழ்ப்பாணமாவட்டத்தின் பலபகுதிகளிலும் பாத்தீனியச் செடிகள் வளர்ந்துகாணப்படுகின்றன.

இவற்றை இல்லாதொழிக்கும் நடவடிக்கையினை வடக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சு பாரியளவிலான நிதி ஒதுக்கீட்டுடன் திட்டத்தை முன்னெடுத்து கண்துடைப்பைமட்டும் செய்திருந்ததாகவும், இதனால் தமக்கு எவ்விதமான பயன்களும் உரியமுறையில் கிடைக்கவில்லையென்றும் விவசாயிகளும், மக்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பயிர்செய் நிலங்களில் வளரும் பாத்தீனியச் செடிகள் விவசாய நடவடிக்கைகளை முழுமையாகபாதிக்கச் செய்வதாகவும், இச்செடிகளைகால்நடைகளும் மேய்வதில்லையென்றும் இதனால் இவற்றின் தாக்கம் நாளாந்தம் பெருகிக் கொண்டேசெல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாத்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவதற்கு துறைசார்ந்தவர்கள் உரியகாலத்தில் நடவடிக்கை எடுக்காதவிடத்து எதிர்காலத்தில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மட்டுமல்லாது பொதுமக்களும் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய ஆபத்துள்ளதாகவும் பலதரப்பட்டோராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: