டீசல் பற்றாக்குறை – தனியார் பேருந்து சேவையில் நெருக்கடி – 20வீதமான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடும் என சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Monday, June 6th, 2022

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து இன்று முதல் டீசல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்றுமுதல் 800 மெட்ரிக் டன் டீசல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது. எதிர்வரும் சில நாட்களில் இந்த தொகையை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை

டீசல் பற்றாக்குறை காரணமாக மொத்த தனியார் பேருந்துகளில் குறைந்தது இருபது வீதமான 5,000 பேருந்துகள் மாத்திரமே நாட்டில் சேவையில் ஈடுபடுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் இக்கட்டான நேரத்தில், மொத்த பேருந்துகளில் 50% அதாவது 18,000 பேருந்துகளே சேவையில் ஈடுபட்டு வந்தன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

டீசலைப் பெற்றுக்கொள்ள பேருந்துகளை நீண்ட வரிசையில் நீண்ட வரிசையில் நிறுத்த வேண்டியுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகள், தனியார் பேருந்துகளுக்கு எரிபொருளை விநியோகித்த போதிலும் இன்னும் குறைபாடுகள் இருப்பதாக விஜேரத்ன கூறியுள்ளார்.

அண்மைய வரி திருத்தத்தின் பின்னர் ஏற்பட்ட விலை உயர்வை தாங்க முடியவில்லை. டயர்கள், டியூப்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

எனினும் இரண்டாம் தவணை இன்று ஆரம்பித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்களின் வசதிக்காக பல பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக கெமுனு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: