வடக்கு, கிழக்கு முஸ்லிம்களது பிர்சினைகளிலும் அரசு கவனம் – ஜனாதிபதியின் செயலாளர் ஹரீஸ் எம்.பியிடம் தெரிவிப்பு!

Friday, May 12th, 2023

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆராய தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையே நடைபெறும் தொடர் பேச்சுவார்த்தை போன்று, முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் பிரதிநிதிகளுடனும் பேச்சு நடததப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் கட்சிகள் ,முஸ்லிம்களின் பிரதிநிதிகளுடனும் மற்றும் மலையகப் பிரச்சினனைகள் தொடர்பில் பேசுவதற்கு மலையக மக்களின் பிரதிநிதிகள், கட்சிகளுடனம் ஜனாதிபதி பேச்சு நடத்த வேண்டியதன் அவசியத்தை ஹரீஸ் எம்,பி வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதியின் செயலாளர் – நீண்டகாலத் தீர்வை எட்டும் வகையில் இதய சுத்தியுடன் ஜனாதிபதி பேச்சுவாரத்தைகளை முன்னெடுப்பார்.

தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அர்த்தபுஷ்டியான தீர்வை காண்பதற்கே இந்தப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்ததாக நாடாளுமன்ற உ றுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: