தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் திறந்துவைப்பு!

Friday, June 11th, 2021

பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலையான தேசிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை இன்று (11)  திறந்துவைக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இன்று முற்பகல் குறித்த வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட பிரமுகர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2015 ஆம் ஆண்டு சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிந்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளுக்கு அமைய சீன அரசாங்கத்தினால் இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டது.

இந்த வைத்தியசாலையில் 200 கட்டில்களும் இரத்த மாற்று சிகிச்சைகளுக்காக 100 கட்டில்களும் சிறுநீரகம் பொருத்தும் சத்திர சிகிச்சை கூடமும் 2 தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரய்ச்சி, கொவிட் 19 தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே மற்றும் வைத்தியர்கள் கலந்து கொண்டுடிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: