ஈ.பி.டி.பியின் மேதின அறைகூவல் : வடக்கு கிழக்கு எங்கும் சுவரொட்டிகள்!
Sunday, May 1st, 2016நாளை உலக உழைப்பாளர் தினமாகும். இதனை முன்னிட்டு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சுவரொட்டிகள் வடக்கு கிழக்கு பகுதிகளெங்கும் ஒட்டப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.
“எமது நிலம் எமக்கே சொந்தம்!
சொந்த மண்ணில் அரசியல் சுதந்திரம்!!
உழைக்கும் மக்கள் நிமிர்ந்திட உரிமை!!
இவைகளுக்காக எழுவோம்..”
என்ற சுலோகம் அடங்கிய சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி,வவுனியா,மன்னார்,முல்லைத்தீவு ஆகிய வடக்கின் பகுதிகளிலும், கிழக்கின் திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய பகுதிகளிலும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
யாழ்.பதில் சுகாதார வைத்திய அதிகாரி விவகாரம் – குழப்பத்தில் வைத்திய அதிகாரி!
ஆளுநர் தலைமையில் நடைபெற்ற வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடனான மதிப்பாய்வு கலந்துரையாடல்!
அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பான விசேட குழு முதல் தடவையாக கூடுகிறது!
|
|