வடக்கில் மேலும் 13 பேருக்கு கொவிட்-19 தொற்று: மருத்துவர் கேதீஸ்வரன்!
Friday, March 19th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மானிப்பாய் வைத்தியசாலை உத்தியோகத்தர் உட்பட யாழ்ப்பாணத்தில் 8 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ் வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 248 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் எவருக்கும் தொற்று
உறுதி செய்யப்படவில்லை.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று 410 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 13 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 8 பேரும், வவுனியா மாவட்டத்தில் 5 பேரும் உள்ளடங்குகின்றனர்.
Related posts:
பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுங்கள் - ஜனாதிபதியிடம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோ...
அதிபரின் கடிதம் வேண்டும் - அரச மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத...
|
|
|


