வடக்கில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளி மாற்றியமைக்கப்பட வேண்டும் – மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய வலியுறுத்து!

Monday, April 18th, 2022

வடக்கில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியை மாற்றியமைக்க வேண்டும் என வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய தெரிவித்தார்.

காங்கேசன்தறையில் உள்ள தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான விடயங்களை பொலிஸார் என்ற ரீதியில் எங்களால் செய்யக்கூடிய அனைத்து விடயங்களையும் செயற்படுத்த முயற்சி செய்யவுள்ளேன். அதற்குரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்துள்ளதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

அத்துடன் வடக்கில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி நிலையினை மாற்றி அமைக்க வேண்டும். அந்த இடைவெளி நிலையினை இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை மேம்படுத்துவது கட்டாயமாக செய்யப்பட வேண்டிய விடயம்.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என்ற ரீதியில் இந்த விடயங்களை நான் மேற்கொள்வதற்கு தயாராக இருக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:

மன உளைச்சலே பெறுபேற்று வீழ்ச்சிக்கு காரணம் - இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஸ்டாலின் தெரிவிப்பு!
அடுத்த சில மாதங்களில் கடன் மீளப்பெறும் இலக்கானது 400 மில்லியனைத் தாண்டும் - தேசிய வீடமைப்பு அபிவிருத...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் எந்வொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட...