நீதிமன்ற அலுவல்களை முன்னெடுப்பது தொடர்பாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே விஷேட அறிக்கை !

Wednesday, October 7th, 2020

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் நீதிமன்ற அலுவல்களை முன்னெடுப்பது தொடர்பாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் Covid -19 நிலைமையின் கீழ் நீதிமன்ற அலுவல்கள் மேற்கொள்ளப்படும் முறை மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகள் குறித்து நீதிமன்ற சேவை ஆணைக்குழுவினால் அனைத்து நீதிமன்றங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலுள்ள பிரதேசங்களுக்கமைவாக திகதி குறிப்பிடப்பட்ட வழக்குகளுக்கு வேறு தினமொன்றை வழங்குவதற்கும் இந்த திகதிகள் தொடர்பில் அதன் நீதிமன்ற வளவில் அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்துவதற்கும், தேவையான ஆலோசனைகள் நீதிமன்ற சேவை ஆணைக்குழுவினால் தற்பொழுது சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக ஊரடங்குச் சட்ட காலம் நிறைவடைந்த பின்னர் சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை கடைப்பிடித்து தொடர்பாகட நீதிமன்ற வளாகத்திற்குள் சென்று தமது வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதியை அறிந்துகொள்ள முடியும் என்றும் குறித்த  தரப்பினருக்கு மேலும் தெரிவித்துக் கொள்கின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: