வடக்கில் தொடர்ந்து சில தினங்களில் மிதமான மழை கிடைக்க வாய்ப்பு – விரிவுரையாளர் பிரதீபராஜா எதிர்வுகூறல்!

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் இன்று மிதமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார்.
இன்று 10.02.2022 வியாழக்கிழமைமுதல் 13.02.2022 ஞாயிற்றுக்கிழமை வரை மழை தொடலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் தொடர்ந்து 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.
எனவே நெல் மற்றும் வெங்காய அறுவடை செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகள் முன்கூட்டியே திட்டமிட்டு அறுவடை செயற்பாடுகளை மேற்கொள்ளுவது நன்மை பயக்கும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
2018 A/L பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களின் முடிவுத் திகதி!
வீடுகள் மற்றும் தனிப்பட்ட இடங்களில் எரிபொருளை சேமித்து வைப்பதை தவிருங்கள் - பொதுமக்களிடம் பொலிசார் வ...
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை - மத்திய வங்கி ஆளுந...
|
|