வடக்கில் தெற்கு மக்களுக்கு இடமில்லை – அமைச்சர் ராஜித!
Tuesday, May 2nd, 2017
வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்படும் செயற்திட்டங்களில் இம்மாகாண இளைஞர் யுவதிகளே ஈடுபடுத்தப்படுவர். மாறாக தெற்கிலிருந்து எவரும் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் எழுந்து நிற்க முடியாது அமர முடியாது பலர் தமது வாழ்நாளை படுக்கையில் செலவிட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையை எதிர்கொண்டுள்ளவர்களின் விபரங்களை திரட்டித்தருமாறு வட. மாகாண சுகாதார அமைச்சரிடம் கோரியுள்ளேன். அதன்படி அவர்களுக்கான சிகிச்சைகளை வீட்டிலிருந்தே பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்கைக்கு வழிவகுப்போம்.
வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்படும் அனைத்து செயற்திட்டங்களிலும் வடக்கு மாகாண இளைஞர் யுவதிகளே இணைத்துக் கொள்ளப்படுவர். மாறாக தெற்கிலிருந்து அழைத்து வரப்படுபவர்களுக்கு வடக்கில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டார்..
Related posts:
|
|
|


