வடக்கில் காணிகள் விடுவிப்பு!
Monday, January 21st, 2019
வடக்கில் ஆயிரத்து 201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி இன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களில் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.
கிளிநொச்சியில் 972 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 120 ஏக்கர் காணியும் பொது மக்களிடம் கையளிக்கப்பட உள்ளதுடன், யாழில் 46 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வறட்சியான காலநிலையால் மின் உற்பத்தி பாதிப்பு!
மேலும் ஒருவாரத்திற்கு பாடசாலைகள் மூடப்படும் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
சீனா தனது அரசியல் கருத்துக்களை உலகின் மத்தியில் திணிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை – பிரதமர் மஹிந்த ...
|
|
|


