வடக்கில் இன்று வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்!

Wednesday, April 3rd, 2019

வட மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கென நிதி ஒதுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு போராட்டக்காரர்கள் இதன்போது எதிர்ப்பு வெளியிட்டனர்.

’30,000 ஆசிரியர் வெற்றிடமிருந்தும் பட்டதாரி நியமனம் எங்கே?’, ‘நாட்டில் ஜனநாயகமாம் தொழிலுரிமை கிடையாதாம் இதுவா நல்லாட்சி’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு ஆரப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts: