வடக்கின் மேம்பாடே எமது நோக்கம்!- யாழ். இந்­திய துணைத்­தூ­துவர்

Tuesday, March 15th, 2016

பொரு­ளா­தார அபி­வி­ருத்திமிக்க மாகா­ண­மாக வடக்கு மாகா­ணத்தை உருவாக்குவதே எமது நோக்கம் என யாழ். இந்­திய துணைத்­தூ­துவர் ஆ.நட­ராஜன் தெரி­வித்­துள்ளார்.

முல்­லைத்­தீவு ஒட்­டு­சுட்­டானில் 6 ஏக்கர் காணியில் 300 மில்­லியன் ரூபாவில் தொழிற் பயிற்சி மையம் ஆரம்­பிக்­க­வுள்­ளமை தொடர்­பாக அண்­மையில் இடம்­பெற்ற ஊட கவியலாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

வடக்கு மாகா­ணத்தை பொரு­ளா­தார ரீதியில் முன்­னேற்­று­வ­தையே முக்கியமாகக்கொண்டு நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். கடந்த வரு­டத்தில் தமிழ் நாட்டில் இருந்து முத­லீட்­டா­ளர்கள் இங்கு வந்­து­சென்­றுள்­ளார்கள்.

இந்த வருட இறு­திக்குள் தமிழ்­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் இங்கு வந்து முத­லீடு செய்­வதை நாம் வர­வேற்­கின்றோம்.

வடக்கின் பலாலி விமான நிலையம் மற்றும் துறை­முக அபி­வி­ருத்தி தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி வரு­கின்றோம். மேலும் மீனவர் பிரச்­சினை தொடர்­பா­கவும் ஆராய்ந்து வரு­கின்றோம். இது தொடர்பில் அண்­மையில் இலங்­கைக்கு வருகை தந்த இந்­திய வெளிவி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் குறித்த விட­யங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை­யினை மேற்­கொண்­டி­ருந்தார்.

இந்­திய அர­சாங்கம் பல்­வேறு வேலைத்­திட்­டங்­களைச் செய்து வரு­கின்­றது. குறிப்­பாக அச்சு­வேலி தொழிற்­பேட்டை ஆரம்­பிக்­கப்­பட்ட நிலை­யிலும் அது தற்­போது செய­லற்றுக் காணப்­ப­டு­வது மிகுந்த வேத­னை­ய­ளிக்­கி­றது.

மது­ரை­யி­லி­ருந்து 50 ஆயிரம் மல்­லிகை கொண்டு வந்து வவு­னி­யாவில் 40 ஆயிரம், யாழ்ப்­பாணம், புன்­னா­லைக்­கட்­டு­வனில் 10 ஆயிரம் என்று வழங்­கி­யுள்ளோம். யாழ்ப்பாணம் பொது நூல­கத்தில் இந்­தியன் கோனர் ஆரம்­பித்­துள்ளோம். இதற்கு இந்தியாவி­லி­ருந்து பல நூல்­களைக் கொள்­வ­னவு செய்து வைத்­துள்ளோம். இவற்றை அனை­வரும் வாசித்து அறிய வேண்டும். இத்­த­கைய திடீர் திட்­டங்கள் மக்­களின் நன்மை கரு­தியே முன்­னெ­டுக்­கப்­பட்­ட­வை­யாகும்.

இதே­வேளை, இங்கு இந்­தி­யாவின் முன்னாள் ஜனா­தி­பதி மறைந்த அப்துல் கலாமின் உருவச்­சி­லையை வைக்­க­வுள்ளோம். குறிப்­பாக அவ் உரு­வச்­சிலை இந்­தி­யா­வி­லி­ருந்தே கொண்டு வரப்­பட்டு நிறு­வப்­படும். கடந்த வருடம் புன­ர­மைக்க ஆரம்­பிக்­கப்­பட்ட சர்­வ­தேச விளை­யாட்­ட­ரங்­கான துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கு அடுத்த மாத ஆரம்­பத்தில் திறக்கப்ப­ட­வுள்­ளது.

அத்­துடன் இந்­திய தூத­ர­கத்தில் கதக், யோகா, மற்றும் இந்­திய மொழி என்­பன இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­கின்­றது. இனி வரும் காலங்­களில் சிறுதொழில் முயற்­சி­யா­ளர்­க­ளுக்­கான உத­விகள் வழங்­கப்­படும்.

இந்­திய தூத­ர­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் கலா­சார கலை நிகழ்­வுகள் யாழ். நகரத்தில் மட்­டு­மல்­லாது வடக்­கி­லுள்ள கிரா­மங்­க­ளிலும் நடத்­து­வ­தற்கு திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரி­வித்தார்.

Related posts: