இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளை அகாசி வரவேற்றுள்ளார்!

Sunday, April 10th, 2016

தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க முயற்சிகளை ஜப்பானின் இலங்கைக்கான சமாதான தூதுவர் யசுசி அகாசி வரவேற்றுள்ளார்.

பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்சா டி சில்வாவை ஜப்பானில் வைத்து சந்தித்தவேளையில் அகாசி தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அரசாங்கத்தின் நல்லிணக்க திட்டங்களை ஹர்சா டி சில்வா, அகாசியிடம் எடுத்து கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த அகாசி, இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு தமது பாராட்டை தெரிவித்ததுடன் இந்த முயற்சிகளுக்கு ஜப்பானின் முழுமையான உதவி கிடைக்கும் என்றும் தெரிவித்ததாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts:


அச்சுறுத்தலுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் 20 தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக கற்றல் நடவக்கை - கல்வி ...
இறக்குமதியான 30 ஆயிரம் தொன் சேதன பசளை நேற்றையதினம்முதல் பிற மாவட்டங்களுக்கு விநியோகம் – அமைச்சர் மகி...
ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல்களுக்கு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தி – உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து த...