வடக்கின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் இந்திய பதில் உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் வடக்கு ஆளுநருடன் விசேட சந்திப்பு!
Wednesday, March 13th, 2024
வடக்கு மாகாணத்திற்கான சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநருடன் விசேட சந்திப்பொன்றினை மெற்கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது, வடக்கு மாகாண சுற்றுலாத்துறை முன்னெடுக்கக் கூடிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி மின்னுற்பத்தியை மேற்கொள்ளுதல் மற்றும் வடக்கில், பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல், காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவரும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பெண் சட்டத்தரணி மீது சிறைக் காவலர்கள் நீதிமன்றில் முறையீடு!
சீருடைக்கான வவுச்சர் சீட்டுக்கள் இதுவரை கிடைக்கவில்லை - இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
2023ஆம் ஆண்டுக்கு முதலாம் வகுப்புக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு!
|
|
|


