2023ஆம் ஆண்டுக்கு முதலாம் வகுப்புக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு!

Sunday, July 31st, 2022

2023ஆம் ஆண்டுக்கு முதலாம் ஆண்டு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்களை கையளிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்களை கையளிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெற்றோர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எதிர்வரும் முதலாம் திகதி முதல் 5ஆம் திகதி வரையான 5 நாட்களில் கடந்த வாரத்தை போன்று 3 நாட்களுக்கு மாத்திரம் பாடசாலை கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் தொலை காணொளி ஊடாக மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

வடமராட்சியில் சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் திறந்து...
நாம் ஒன்றுபடுவதை அரசியல்வாதிகள் விரும்பவில்லை - ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் கஞானசார தேரர...
காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களும் இரத்து செய்யப்பட...