வடக்கின் அபிவிருத்திக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவு வழங்கும் – ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் சுவிஸ் தூதரகத்தின் முதநிலைச் செயலாளர் தெரிவிப்பு!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதநிலைச் செயலாளர் திரு ஒலிவர் பிரஸ் (OLIVIER PRAZ) தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய வந்த அவர், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் வடமாகாண மக்களின் பொதுவான உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் வடமாகாணத்தில் தற்போது தாம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் குறித்து சுவிஸ் தூதரகத்தின் பிரதித் தலைவருக்கு ஆளுநர் விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நவம்பர் முதல் முன்னுரிமை வீதி ஆரம்பம்!
நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தனியார் போக்குவரத்து சேவைகளை வழங்க வேண்டும் – வைத்தியர்கள்...
ஒருசில வர்த்தக மாபியாவுக்குள் முட்டிமோதும் முட்டைகள் - உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்ச...
|
|