ஒருசில வர்த்தக மாபியாவுக்குள் முட்டிமோதும் முட்டைகள் – உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சரிடம் வலியுறுத்து!

Sunday, March 3rd, 2024

உள்ளூர் சந்தையில் முட்டை படிப்படியாக குறைக்கப்படுவதுடன், முட்டை ஒன்றின் விலை 35 ரூபாய் முதல் 40 ரூபாவிற்கு மேல் இல்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மே மாதத்திற்குள் இதன் விலை மேலும் குறைவடையும் எனவும் ஒரு முட்டையின் விலை நிச்சயமாக 25-30 ரூபாவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், வர்த்தமானியில் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை பரிந்துரைத்து இதனை கட்டுப்படுத்தினால் சந்தையில் மீண்டும் முட்டை நெருக்கடி ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சிங்கள புத்தாண்டின் போது இந்த நாட்டில் முட்டை ஒன்றின் விலை 35 முதல் 40 ரூபாவிற்கு மேல் உயராது. மே மாதத்துக்குள் ஒரு முட்டை கண்டிப்பாக 25-30 ரூபாய்க்குள் இருக்கும்.

இந்நிலையில் விலைகள் குறையுமிடத்து வர்த்தமானியில் வெளியிட்டு கட்டுப்படுத்தி சென்றால் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனால் விவசாயிகள் முட்டை வியாபாரத்திலிருந்து விலகிக் கொண்டால் மீண்டும் முட்டை நெருக்கடி ஏற்படும்.

இதேவேளை, விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தலைமையில் முட்டை உற்பத்தி மற்றும் விலை தொடர்பான கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றிருந்தது.

புத்தாண்டு காலத்தை இலக்கு வைத்து முட்டையின் விலையை அதிகரிக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியிருந்தது.

இதேவேளை  இலங்கையில் முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு 30 ரூபாவாக இருந்தாலும், சந்தையில் உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை 60 ரூபாவாக உயர்த்துவது நியாயமில்லை, எனவே முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் மகிந்த அமரவீர, முட்டையின் விலையை அதிகரிப்பதற்கான சூழ்ச்சிகள் பல இடம்பெறுவதாகவும் அண்மையில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். ஒரு முட்டையின் விலை 50 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது விற்பனை விதியாகும்.

இது முறையற்ற விலை உயர்வு, இதை அதிகரிக்கக் கூடாது, இது சுரண்டல், குறைந்த விலையில் கொடுக்கலாம் என தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை ஒரு முட்டையின் விலையை போக்குவரத்து மற்றும் சில்லறை இலாபத்துடன் சேர்த்து கணக்கிடுகிறது.

அதைத்தான் வர்த்தமானி இலாபத்துடன் செய்கிறது. அப்போது கண்டிப்பாக ஒரு முட்டை 50 – 60 ரூபாய்க்கு குறைவாகத்தான் இருக்கும்.

இதேவேளை, இந்த நாட்டில் நாளொன்றுக்கு 50 இலட்சம் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய பிரசாரத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

ஆனால் அதில் மூன்று அல்லது நான்கு மோசடி வியாபாரிகள் இலாபம் அடைகிறார்கள் என்கிறார்.

தினமும் 50 இலட்சம் முட்டைகள் விற்பனையாகிறது. இந்த இலாபம் யாருக்கு போனது? இந்த இலாபம் மூன்று அல்லது நான்கு மோசடி வியாபாரிகளுக்குப் போய்விட்டது.

அவ்வாறான நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சிஐடி) உடனடியாக முறையான விசாரணை நடத்தி, அதற்கு அனுசரணை வழங்கியது யார் என்பதைக் கண்டறிய வேண்டும்.

திங்கட்கிழமைக்குள் இந்த நாட்டில் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், பிரிவினைவாத எண்ணத்தை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இன்னும் உள்ளது -...
பயிரிடப்படாத நிலங்களை அரசுடமையாக்குவதற்கான சட்டவரைவில் திருத்தம் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறி...
வடதிசை நோக்கிய இயக்கம் - ஏப்ரல் 15ஆம் திகதிவரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கும்...