பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், பிரிவினைவாத எண்ணத்தை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இன்னும் உள்ளது – ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவர் வலியுறுத்து!

Sunday, February 20th, 2022

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், பிரிவினைவாத எண்ணத்தை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இன்னும் நமக்கு உள்ளது என “ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்..

அதற்காக, அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் இணைந்து பயணிக்கத் தமது குழு தயாராக உள்ளதென்றும் அவா் கூறியுள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, பல்கலைக்கழக சமூகத்தின் கருத்துக்களைக் கேட்டறியும் நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற போதே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு, ருஹுணு, ஜயவர்தனபுர, யாழ்ப்பாணம், தென்கிழக்கு, பேராதனை, களனி, ரஜரட்ட, வயம்ப உள்ளிட்ட 18 பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பீடாதிபதிகள், பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் போன்றோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

வளமான மண், வளமான நிலம், சுபீட்சம், நாகரிகம் மற்றும் கலாசாரத்தை மதிக்கும் ஒரு சுதந்திர நாடொன்று எமக்கு அன்று உரித்தாக இருந்தது.

மேலும் ஏகாதிபத்தியவாதிகள் எங்களிடம் இருந்து பறித்த அந்த நாட்டை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் கோர வேண்டுமெனவும் இங்கு கருத்து வெளியிட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார்.

களத்தில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்வு காண்பதற்கான புதிய அணுகு முறையாகவே இந்தச் செயலணி முன்னோக்கி நகர்கின்றது என்றும் நல்ல நோக்கங்களை எழுத்துக்களில் மாத்திரம் வைத்திருப்பதில் பயனில்லை. அவற்றை வெற்றிகொள்வதற்கு அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்திய தேரர், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், பிரிவினைவாத எண்ணத்தை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இன்னும் நமக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதற்காக, அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் இணைந்துப் பயணிக்கத் தமது குழு தயாராகவே உள்ளதென்றும் தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: