வசீம் தாஜூதீன் வழக்கு – சுமித் பெரேராவுக்கு பிணையில்!

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதீன் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் நாராஹேன்பிட்ட குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு விசாரணை இன்று (16) கொழும்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
றக்பி வீரர் வசீம் தாஜூடின் கொலை வழக்கில் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்ட குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், முதலாம் சந்தேக நபரான சுமித் பெரேரா இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
சார்க் மாநாட்டை ஒத்திவைக்க இலங்கை ஆதரவு!
இரணைமடு குளத்தை பார்வையிட வருபவர்களுக்கு எச்சரிக்கை!
கொரோனா தொற்று இன்னும் உச்ச நிலையை தொடவில்லை : உயிர்ப்பலிகள் வேகம் அதிகரிக்கும் - உலக சுகாதார நிறுவ...
|
|