வங்குரோத்து தேசம் என்ற முத்திரை விரைவில் அகற்றப்படும் – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!
Monday, January 30th, 2023
இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களில் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீள முடியுமென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், இலங்கை வங்குரோத்தான தேசம் அல்ல, மீண்டும் எழுச்சி பெறும் புகழ்பெற்ற தேசம் என்று கூறினார்.
மேலும் கடனை அடைக்க ஆரம்பிப்பதன் மூலம் புதிய முதலீடுகளை கொண்டு வரலாம், அதனூடாக வேதனங்கள் அதிகரிக்கும் என்று கூறிய அமைச்சர், எதிர்காலத்தில் வரி, வங்கி வட்டி வீதங்களும் குறையலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பலர் இந்த முன்னேற்றத்தை ஏற்கவில்லை, எனவே நாசவேலையில் ஈடுபடுகிறார்கள் என்று அமைச்சர் மேலும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஓட்டோ, மோட்டார் சைக்கிள் லீசிங் தொகை குறைப்பு!
கொரோனா தொற்று: 650 ஐ நெருங்கியது இலங்கையின் பதிவு!
பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுமாயின் திங்கள்முதல் மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து சேவை முன்ன...
|
|
|


