வங்கிக்கு பணியாளர் சேர்க்கும் நேர்முகப் பரீட்சை இடை நிறுத்தம்!
Monday, March 19th, 2018
இலங்கை வங்கியில் காணப்படும் வெற்றிடங்களுக்காக பணியார்களைச் சேர்த்துக் கொள்வதற்கான பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்காக 17 ஆம் திகதி முதல் நடத்தப்படவிருந்த நேர்முகத்தேர்வுகள் அனைத்தையும் இடைநிறுத்தும் படி அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் லக் ஷ்மன் கிரியெல்ல இந்த அமைச்சுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
வங்கி உட்பட்ட அமைச்சின் அனுமதியின் கீழ் 06.11.2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பத்திரிகைகளில் வெளியான அறிவித்தல்களின் பின்னர் பரீட்சைகள் திணைக்களத்தால் 18.8.2017 ஆம் திகதிமுதல் போட்டிப் பரீட்சைகள் நடத்தப்பட்டன. இதற்காக இலங்கை வங்கி பரீட்சைகள் திணைக்களத்துக்கு 30 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளது.
போட்டிப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 11இ000 பேரை நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பதெனத் தீர்மானித்து 3483 பேருக்கு நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதம் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து ஆட்களைச் சேர்க்கும் நடவடிக்கைகள் பின்போடப்படுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்த சந்தர்ப்பம் கேட்டு அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்லவுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும்இ இது தொடர்பாக மற்றுமொரு கடிதம் ஜனாதிபதிக்கு கடந்த 14 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகவும் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|
|


