காழ்ப்புணர்வுகளால் கூறப்படுவதை நாம் கண்டுகொள்வதில்லை – மக்களின் நலன்களே எமது நோக்கம் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Wednesday, August 2nd, 2023

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜதார்த்தமான அரசியல் செயற்பாடுகளை கண்டு அச்சமுற்றுள்ள ஒரு சிலர் தமது அரசியல் இருப்புக்கான நோக்கங்களுக்காகவும் காழ்ப்புணர்சியாலும் திட்டமிட்டு கூறிவரும் கருத்துக்களை நாம் கண்டுகொள்வதில்லை என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் அல்லது மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளை பெற்றுக்கொடுக்காது என வெளிப்படையாக தெரியும் செயற்பாடுகளுக்கு நாம் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (02.08.2023) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்த  ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்  மேலும் கூறுகையில் –

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் இனங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழி விவகாரத்தை மையப்படுத்தி கடையடைப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் அன்றையதினம் மக்கள் நலன்களை முன்நிறுத்தியதான கிளிநெச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்றது.

இதை சிலர் ஊடகங்களில் தமது அரசியல் தேவைக்காகவும் தமது இருப்புக்களை பாதுகாப்பதற்காகவும் விமர்சித்துள்ளனர்.

ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் அல்லது மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளை கிடைக்காது என வெளிப்படையாக தெரியும் விடயங்களுக்கு எமது கட்சி ஆதரவளிக்கப் போவதில்லை என்பதுடன் எதிர்காலத்திலும் அவ்வாறே இருக்கும்

மாறாக நடைமுறைக்கு சாதகமான மக்களுக்கு நன்மைகளையோ அல்லது தீர்வுகளையோ பெற்றுக்கொடுக்கும் விடயங்களானால் அதற்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதற்கும் எமது கட்சி பின்நிற்கப் போவதில்லை.

இதேநேரம் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரமானது தற்போது நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கும் ஒரு விடயமாகும்.

அதனடிப்படையில் குறித்த தடயவியல் சான்றுகளை இரசாயண பகுப்பாய்வு ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதனூடாக கிடைக்கும் அறுதியான அறிக்கையின் அடிப்படையிலேயே அதன் உண்மை தன்மையை அறியமுடியும்.

அதேநேரம்  குறித்த விடயத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுடன் உண்மைகள் வெளிப்பட வேண்டும் என்பதிலும் எமது கட்சி அதிக அக்கறை கொண்டுள்ளது.

அதனடிப்படையில் அது தொடர்பான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கும் அமைச்சரவையிலும் அழுத்தங்களையும் கொடுத்துவருவதுடன் அதை விரைவு படுத்துவதிலும் அதிக அக்கறை காட்டிவருகின்றார் என்றும் சுட்டிக்காட்டியிந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: