வங்காள விரிகுடாவில் உள்ள நாடுகளில் திருகோணமலை துறைமுகத்திற்கு வர்த்தக ரீதியில் அதிக செல்லாக்கு!

Sunday, January 29th, 2017

 

வங்காள விரிகுடாவில் உள்ள நாடுகளின் அபிவிருத்தியில் திருகோணமலை துறைமுகத்திற்கு வர்த்தக ரீதியில் அதிக செல்வாக்கு நிலவும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முத்துராஜவெல கைத்தொழில் வலயத்தின் முதலாவது சேவைகள் நகரத்தின் முதல் கட்டப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நாட்டின் இளைஞர் சமூகத்திற்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை பாரியளவில் அபிவிருத்தி செய்யப்படுமென்று தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில்:

இலங்கை இந்துசமுத்திரத்தின் பொருளாதார கேந்திரநிலையமாக மாற்றியமைக்கப்படும். யுத்தத்தின் பின்னர் பாரிய அபிவிருத்தி செயற்திட்டங்களை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கண்டி, கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களை இணைத்து பாரிய அபிவிருத்தி வலயமொன்று அமைக்கப்பட இருக்கிறது. இரண்டு விமான நிலையங்களும் இரண்டு துறைமுகங்களும் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றன. இதற்கமைய வர்த்தக வலயங்களும் மேம்படுத்தப்படும். இதற்கு பாரியளவிலான நிதி தேவை தற்சமயம் கடந்த அரசாங்கம் பெற்ற கடனை செலுத்த வேண்டியிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

indian-ship-2

Related posts: