தேசிய தொழில்நுட்ப கல்லூரி அமைக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்!

Friday, February 24th, 2017

இலங்கையில் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிரவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொரியாவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனம் சுமார் 190 கோடி ரூபா செலவில் .இந்த தொழில்நுட்பக் கல்லூரியை அமைப்பதற்கான நிதியுதவியினை வழங்கவுள்ளது.  இதற்குரிய புரிந்துணர்வுஉடன்படிக்கையில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் நேற்று முன்தினம் கைச்சாத்திட்டன.

 தொழில்நுட்ப கல்லூரிக்கான கட்டுமானப்பணிகளை ஒன்றரை வருடங்களுக்குள் பூர்த்திசெய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். பாடசாலை பாடவிதானத்தில் தொழில்நுட்ப பாடம் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பாடத்தை போதிப்பதற்கு கூடுதலான ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த தேவையை நிறைவேற்ற புதிய தொழில்நுட்ப கல்லூரி உறுதுணையாக அமையும் என்று கல்வி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

தற்போது பாடசாலைகளில் அமுலாகும் மாணவர் மதிப்பீட்டுமுறைக்கு பதிலாக எளிமையான முறை அமுலாக்கப்படவுள்ளது. சமகாலமுறை பற்றிய முறைப்பாடுகளை பரிசீலித்த பின்னர் இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

akila-viraj-minister

Related posts:

85 வீதமான கொரோனா மரணங்கள் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கே நேர்ந்துள்ளன - சுகாதார மேம்பாட்டு ப...
தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
19 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு - பிரதமர் மஹிந்த ராஜபக்ச ...