கௌதாரிமுனை மகாவித்தியாலய மாணவர்களது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நடவடிக்கை!

Monday, August 12th, 2019

நீண்டகாலமாக பூநகரி கௌதாரிமுனை மகாவித்தியாலய மாணவர்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு அப்பகுதி பொதுஅமைப்புகளும் பாடசாலை சமூகத்தினரும் விடுத்திருந்த கோரிக்கைக்கு இணங்க அதற்கு தீர்வுகாணும் முகமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பூநகரி கௌதாரிமுனை மாணவர்களின் பிரதான கற்றல் நடவடிக்கைகளை கௌதாரிமுனை விநாசியோடை மகாவித்தியாலயம் முன்னெடுத்து வருகின்றது.

உயர்தரம்வரை கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இந்த பாடசாலையில் ஏறத்தாழ 150 க்கும் சற்று குறைவான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில் இப்பாடசாலை மாணவர்களுக்கான குடிநீர் பெற்றுக்கொள்வதில் பாடசாலை நிர்வாகம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றது.

இதுதொடர்பாக தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு பல பொதுஅமைப்புகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் இதுவரை அவர்கள் எவராலும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாதுள்ளது.

இந்நிலையில் குறித்த பொதுஅமைப்புகள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் தமது பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர்.

இரண்டு பக்கமும் ஏறத்தாழ 500 மீற்றர் தூரத்தில் கடல் இருக்கும் நிலையில் குறித்த பாடசாலைக்கு முன்பாக 200 மீற்றர் தூரத்தில் சமுர்த்தி திட்டத்தில் கட்டப்பட்ட 15 அடிக்கும் அதிகமான ஆழத்தில் நன்நீர் கிணறு ஒன்று அமைந்துள்ளதால் அதிலிருந்து பாடசாலைக்கான குடிநீரை குழாய் வழியூடாக நீர்த்தாங்கி அமைத்து பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

குறித்த கோரிக்கையை அடுத்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது நிதி ஒதுக்கீட்டின் மூலம் அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: