கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – குடிவரவு குடியகல்வு திணைக்களம் தகவல்!

Saturday, May 28th, 2022

நாட்டின்  தற்போதைய நிலவும் நெருக்கடி நிலை காரணமாக கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான நாளாந்த சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டு சேவை மற்றும் அதற்கு நிகரான 2500 டோக்கன்கள் நேற்று (27) வழங்கப்பட்டன. கடவுச்சீட்டு பெறுவதற்காக சிலர் வெளியில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டு பெறுவதற்கு தினமும் சுமார் 2500 பேர் வரவழைக்கப்படுகின்றனர். சனக்கூட்டம் காரணமாக திணைக்கள வளாகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் வெளியில் தங்கியிருந்த மக்களுக்கும் திணைக்களத்தின் பாதுகாப்புக்காகச் செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஆலய திருவிழாக்களில் பங்கேற்க மக்களுக்கு அனுமதி வழக்கப்படமாட்டாது – ஜனாதிபதி ஊட்கப்பிரிவு அறிவிப்பு!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பம் - 4,513 பரீட்சை நிலையங்களில் 622,305 மாணவர்கள் ப...
சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் பரிசீலனை - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப...