வகுப்பறையில் ஒரு மாணவனிடம் இருந்து மற்றுமொரு மாணவனுக்கு கொரோனா பரவும் அபாயம் மிகவும் குறைவு – லேடி ரிட்ஜ்வே விசேட மருத்துவ நிபுணர் தெரிவிப்பு!
Friday, January 28th, 2022
வகுப்பறையில் ஒரு மாணவனிடம் இருந்து மற்றுமொரு மாணவனுக்கு கொரோனா பரவும் அபாயம் மிகவும் குறைவு என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான சிறுவர்கள் வெளி சமூகத்தில் இருந்தே கொரோனா நோயால் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் – “வகுப்பறையில் ஒரு குழந்தையிலிருந்து மற்றொரு குழந்தைக்கு நோய் பரவும் அபாயம் மிகக் குறைவு.
அதேநேரம் வயதான மாணவர்களிடையே இது அதிகரிக்கலாம். ஆனால் தற்போது குழந்தைகள் மத்தியில் நல்ல சூழ்நிலை உள்ளது. 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியை இலவசமாகப் பெறலாம். இந்த வசதிகள் அனைத்தும் குழந்தைகளிடையே நோய் பரவுவதைக் குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.” எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இவ்வாண்டு பாரிய குற்றங்கள் அதிகரிப்பு!
அமெரிக்காவுக்கான மற்றுமொரு புதிய தூதரகம் நிர்மாணிக்க முடிவு!
உள்ளூராட்சி மன்ற தேர்தல்: வாக்குச் செலுத்துவதில் ஆர்வங்காட்டும் வாக்காளர்கள்!
|
|
|


