இவ்வாண்டு பாரிய குற்றங்கள் அதிகரிப்பு!

Sunday, October 9th, 2016

இந்த ஆண்டின் கடந்த காலங்களில் பாரிய குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக பொலிஸ் திணைக்களத்தின் குற்ற பகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையான காலத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு அதே காலப்பகுதியில் பாரிய குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

நாளாந்த அறிக்கைப்படி “டீ” பிரிவு குற்றச் செயல்களாக கருதப்படும் கொலை, பாலியல் குற்றங்கள், வீடுகளை உடைத்து கொள்ளை, கொள்ளை மற்றும் திருட்டு போன்ற ஐந்து விடயங்களை பாரிய குற்றங்களாக கணித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் வரையான காலப்பகுதியில் இவ்வாறான குற்றங்கள் 6126 பதிவாகி இருப்பதாக குற்ற பகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.  எவ்வாறாயினும் 2015ம் ஆண்டு குறித்த காலப்பகுதியில் இவ்வாறான குற்றங்கள் 5978 பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 631 பாரிய குற்றச் செயல்கள் பதிவாகியிருப்பதுடன், அது 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 747 ஆக பதிவாகியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் மனித கொலைகள் 45 பதிவாகியுள்ளதுடன், 22 பொலிஸ் பிரிவுகளில் அவை பதிவாகியுள்ளது. அதிக கொலைக் குற்றங்கள் பதிவாகியிருப்பது கம்பஹா மாவட்டத்தில் என்பதுடன், அது 07 ஆக பதிவாகியுள்ளது.

Sl_police_flag

Related posts: