யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் நூல்கள்அன்பளிப்பு!
Monday, May 29th, 2017
யாழ்ப்பாணபொது நூலகத்திற்கு இந்தியஅரசாங்கத்தினால் 60 இலட்சம் ரூபாபெறு மதியான நூல்களை அன்பளிப்புச் செய்யவுள்ளது.நூல்களை இம்மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துகையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ். பொது நூலகத்திற்கென இந்தியமக்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளசுமார் 16 ஆயிரம் நூல்கள் குறித்ததினத்தில் நன்கொடையாக வழங்கப்படவுள்ளன.
யாழ். பொது நூலகம் எரிக்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு நூல்கள் இருந்துள்ளதாகவும், மிகச் சிறந்த நூல் தொகுதிகள் உள்ளடக்கிய பழம்பெரும் நூலகமாகவிளங்கியுள்ளதால் , மிக அதிகமான நூல்கள் உள்ளடக் கப்படவேண்டும் என இந்தியத் துணைத் தூதுவரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக இந்த நூல்கள் அன்பளிப்புச் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பொதுமக்களின் உரிமைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது!
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் வெளிநாட்டு தூதுவர்களுடன் நிதி அமைச்சர் பசில் ராஜப...
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டு - 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்...
|
|
|


