லீசிங் வாகனத்தை இனிமேல் நினைத்தபடி தூக்க முடியாது – புதிய சுற்றறிக்கையை வெளியிட்டார் பொலிஸ் மாஅதிபர்!

Tuesday, December 27th, 2022

மாதாந்த கட்டணத்தைச் செலுத்தாதபோது, குத்தகை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்றுவதற்கு முயற்சிப்பின் வாகன உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அந்த நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்ன வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகனங்கள் கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்கள் நடந்தால், பொலிஸார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாதாந்த கட்டணத்தைச் செலுத்தாதபோது, குத்தகை அல்லது நிதி நிறுவனங்கள் வாகனங்கள் அல்லது உபகரணங்களை கைப்பற்றும் சம்பவங்கள் தொடர்பில் அவற்றின் உரிமையாளர்களால் முறைப்பாடு செய்ய முயற்சிக்கும்போது அவ்வாறான முறைப்பாட்டை சில பொலிஸ் நிலையங்கள் நிராகரிப்பதாகவும், இனிமேல் அத்தகைய முறைப்பாடுகளை ஏற்று உரிய விசாரணை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: