ரஷ்யா – உக்ரைன் போர் – பாதுகாப்பு காரணமாக விமானந்தாங்கி போர்க்கப்பலை சமர்க்களத்துக்குச் சமீபமாக நகர்த்தியுள்ள பிரான்ஸ்!
Saturday, March 5th, 2022
ரஷ்யா – உக்ரைன் போர் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பிரான்ஸ் தனது சாள்-து-கோல்’ விமானந்தாங்கி போர்க்கப்பலை சமர்க்களத்துக்குச் சமீபமாக நகர்த்தியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு போர்க்கப்பல் நகர்த்தப்படுவதாக இராணுவ அமைச்சர் அறிவித்துள்ளார்.
சைப்ரஸ் தீவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்த போர்க்கப்பல் நகர்த்தப்பட்டு தற்போது ருமேனியா நாட்டுக்கு அருகே ‘கருங்கடல்’ பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
‘காண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளுக்காக’ இந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவ அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,
“ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளுக்கு நாங்கள் உதவி செய்ய கடமைப்பட்டிருப்பதால், நாங்கள் கப்பலை அனுப்பினோம்.” எனவும் இராணுவ அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் - நிதி அம...
ஐ நாவில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களிக்கும் - இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொ...
ஈரானில் ஆறு ஏவுகணை தாக்குதல்கள் - சர்வதேச ஊடகங்கள் தகவல்!
|
|
|


