ரம்புக்கனையில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

ரம்புக்கனை பொலிஸ் பகுதிக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று (21) அதிகாலை 05 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் (19) ரம்புக்கனையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், காயமடைந்தவர்கள் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் சுட்டெரிக்கும் வெயில்: 20 நிமிடங்களுக்கு ஒரு தடைவ கட்டாயம் தண்ணீர் குடியுங்கள் - மருத்துவப...
தனியார் மருத்துவ சேவை சிலவற்றுக்கு வரி விலக்கு!
2,000 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
|
|