தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு!

Wednesday, July 12th, 2023

தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஒரு தேர்தல் மனுவை முன்வைப்பதற்கான காலப்பகுதியை நீடிப்பதற்காகவும், குற்றத்திற்கான அபராத தொகையை அதிகரிப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும் இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.

தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீடிப்பதற்கும் தேர்தலுக்கான அபராதத் தொகையை அதிகரிப்பதற்குமான ஏற்பாடுகளை வழங்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவால், வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளைச் சட்டம், 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டம், 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டம் மற்றும் 1988 ஆம் ஆண்டின் இலக்கம் 2 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்ய வர்த்தமானி முன்மொழிகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: