கௌதாரிமுனை வீதியை புனரமைத்து பேருந்து சேவையை அதிகரியுங்கள் – கிராம மக்கள் கோரிக்கை!

Saturday, April 7th, 2018

கிளிநொச்சி – பூநகரி கௌதாரிமுனை வீதியை நிரந்தரமாக புனரமைத்து பேருந்து சேவைகளை அதிகரிக்குமாறு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பரமன்கிராய் சந்தியிலிருந்து கௌதாரிமுனையின் மன்னித்தலை சிவன்கோயில் வரையான பதினாறு கிலோ மீற்றர் வீதி புனரமைக்கப்படாமலேயே உள்ளது. இதன் காரணமாக வினாசியோடை பாடசாலைக்கு சென்றுவரும் ஆசிரியர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.  மழை காலங்களில் பொதுமக்கள் பயணிக்க முடியாத அளவிற்கு வீதியினை மூடி வெள்ளம் காணப்படும்.

தற்போது இக்கிராமத்திற்கான ஒரேயொரு பேருந்து சேவை மட்டும் நடைபெறுகின்றது. பிற்பகலில் வரும் பேருந்து கௌதாரிமுனையிலிருந்து காலையில் பூநகரி வழியாக கிளிநொச்சியை சென்றடையும். இடைப்பட்ட நேரத்தில் பேருந்து சேவைகள் எதுவும் இடம் பெறுவதில்லை.

இதன் காரணமாக பூநகரி மகாவித்தியாலயத்திற்குச் செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பூநகரி பிரதேச செயலகம், பூநகரி பிரதேச மருத்துவமனை என்பவற்றிற்குச் செல்லும் கௌதாரிமுனை மக்கள் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் குறித்த வீதியினைப் புனரமைத்து பேருந்து சேவைகளை அதிகரிக்குமாறு கௌதாரிமுனை மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts: