யுத்த காலத்தைப் போல மாறும் இலங்கை?

Tuesday, October 24th, 2017

யுத்த காலத்தினைப் போன்றே தற்பொழுதும் இலங்கையில் மண்ணெண்ணெயில் பேருந்துகள் பயணம் செய்வதாகப் பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் சில பேருந்துகள் டீசலுக்கு மாற்றீடாக மண்ணெண்ணெய்பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன விசாரணைக் குழுவினால் இந்த விடயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேருந்துகளில் டீசல் எரிபொருளுக்கு பதிலாக மண்ணெண்ணெயையும் கலந்து பயன்படுத்துவதற்கு பேருந்து உரிமையாளர்கள் அதிக நாட்டம் காட்டி வருகின்றனர்.

மின்சாரம் இல்லாத பிரதேசங்களில் வாழும் மக்களுக்கும் மீனவர்களுக்கும் நன்மை ஏற்படுத்தும் வகையில் மண்ணெண்ணெயின் விலை சகாய அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆயினும் டீசலைக்கொள்வனவு செய்யாமல் இவ்வாறு மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி பேருந்து செலுத்துவதனால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவில் நட்டம் ஏற்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பேருந்துகளில் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெயின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். அத்துடன் யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் வடக்கு கிழக்கில் இவ்வாறு மண்ணெண்ணெய் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

பருத்தித்துறை கடலில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பவில்லை - அச்சத்தில் மீனவர்கள்!
மக்களுக்காக வியர்வை சிந்தாதவர்களை அரசியல் பிரதிநிதிகளாக்கியதே தமிழ் மக்களது இன்றைய வாழ்வியல் நிலைக்க...
42,000 மெட்ரிக் தொன் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் உரம் நாட்டை வந்தந்தது – திங்கள்முதல் விநியோகிக்கப்படும் ...