மக்களுக்காக வியர்வை சிந்தாதவர்களை அரசியல் பிரதிநிதிகளாக்கியதே தமிழ் மக்களது இன்றைய வாழ்வியல் நிலைக்கு காரணம் – ஈ.பி.டி.பியின் வலிகிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் ஐங்கரன்!

Monday, August 20th, 2018

மக்களின் விடுதலைக்காகவோ அன்றி வாழ்வியலுக்காகவோ ஒருதுளி வியர்வை சிந்தாதவர்களை தமது அரசியல் பிரதிநிதிகளாக தமிழ் மக்கள் தெரிவு செய்ததே இன்றுவரை தமிழ் மக்கள் செய்துவரும் தவறாகும். இதனால் தான் இன்றுவரை வாழ்வியலிலோ அன்றி உரிமைசார் பிரச்சினைகளிலோ  எந்தவித இலக்கையும் எட்டமுடியாத இனமாக தமிழ் மக்கள் இருப்பதற்கு காரணம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாகச் செயலாளரும் குறித்த பிரதேச சபையின் உறுப்பினருமான இராமநாதன் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.

ஊரெழு முத்தமிழ் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விளையாட்டு விழா சனசமூக நிலையத்தலைவரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினருமான சிவலிங்கம் நிமல் தலைமையில் முன்பள்ளி மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இன்று வடமகாண சபையின் முதலமைச்சராக இருப்பவர் நீண்டகாலமாக கொழும்பில் தங்கியிருந்தவர் அவருக்கு எமது பிரதேசங்களில் வாழ்ந்த மக்களுடைய துன்பங்களோ துயரங்களொதெரிந்திருக்க வாய்ப்பிருக்காது. ஆனாலும் அவருடைய பேச்சை நம்பி கடந்த மாகாணசபை தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு எதுவிதமான தேவைப்பாடுகளையும் அவர் மேற்கொண்டது கிடையாது.

அதிகாரம் இல்லை வடக்கு மாகாண சபைக்க என்கிறார்கள் ஆனாலும் அதிகாரம் இல்லாத மாகாண சபையில் எப்படி அவருக்கு கீழுள்ள அமைச்சர்கள் ஊழல் செய்தார்கள் அல்லது அதிகார துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றன என்பதே மக்களது கேள்வியாக உள்ளது.

அதுபோலவே தற்போது வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரும் வெறுமனவே அறிக்கை வெளியிடும் தவிசாளராக இருந்து கொண்டு சபையிடம் நிதி இல்லை என்று கூறிக்கொண்டு வருகின்றார்.

இவர்களைத் தெரிவு செய்து உங்களுடைய வரிப்பணத்தில் மாதாந்த கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொண்டு திரும்பவும் உங்களிடம் வந்து சபையிடம் நிதி இல்லை என்று கூறினால் ஏன் இவர்கள் சபையின் தலைவராகவும், ஆளும் கட்சி உறுப்பினராகவும் இருக்கின்றார்கள் என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது.

கடந்த காலங்களில் வறண்டுகிடந்த உங்கள் ஒவ்வொருவரதும்  கிராமத்திற்கு ஒளியூட்டியதோடு பல அபிவிருத்திகளையும் செய்தவர் எமது கட்சியின் செயலாளா் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்.

அதன் நன்றிக் கடனாக நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உங்களுக்காக வியர்வை சிந்திய உங்களது கிராமத்தின் தலைவராக பிரதேச சபையின் உறுப்பினரான சிவலிங்கம் நிமல் அவர்களைத் தெரிவு செய்துள்ளீர்கள். அவருடைய தெரிவினூடாகவே இன்று உங்களுடைய பிரதேசத்தில் வீட்டுத்திட்டங்கள், மலசலகூட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இக்கிராமத்தின் வளர்ச்சிக்காக எமது கட்சியின் செயலாளா் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அயராது உழைத்து வருகிறார். இதனை அறிந்து கொண்டு இனிவரும் காலங்களில் உங்களது பிரதேசத்தின் அபிவிருத்தியில் பங்கெடுப்பீர்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக, ஊடகச் செயலாளர் சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சு முருகேசு நடேசலிங்கம், வலிகாமம் கிழக்கு  பிரதேச சபையின் உறுப்பினர் நாகமணி இராசநாயகம் மற்றும் கௌரவ விருந்தினர்களாக J/267 ஊரெழு  கிராம அலுவலர் எம்.ஆர்.ஜெயதரன், தெல்லிப்பளை வைத்தியசாலை உளநல உத்தியோகத்தர் திருமதி.சாந்தினி ஞானபாஸ்கரன் மற்றும் ஊரெழு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கவிதா அரவிந்தன், J/267 ஊரெழு வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் தபேந்திரம் அகில், குடும்ப நல உத்தியோகத்தர் கே.கிருஜிகா, ஆகியோருடன் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி றஞ்சித்ராஜ் குலகௌரி  அவர்களும் கலந்து கொண்டனர்.

 IMG-147584a6cfa6d5b78cbe538632936db5-V IMG-85abada0703669c72fa9348f99f4784c-V IMG-aab4d2ff7ede4add227963a1dc9c9d2c-V IMG-6044f73389710215fbe3160a9a9e23a5-V IMG-1384e7bb01c94320752abba1d84ee29b-V

Related posts: