42,000 மெட்ரிக் தொன் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் உரம் நாட்டை வந்தந்தது – திங்கள்முதல் விநியோகிக்கப்படும் எனவும் விவசாய அமைச்சு அறிவிப்பு!

Saturday, December 3rd, 2022

ஏறக்குறைய 42,000 மெட்ரிக் தொன் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (MoP) உரம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது

41,876 மெட்ரிக் தொன் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் உரத்துடன் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் மூலம் இது இறக்குமதி செய்யப்பட்டுள்ள குறித்த உரம் இன்று இறக்கப்படும் என்றும் விவசாய அமைச்சு தெரிவித்தள்ளது.

இதேவேளை, 16,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் இலங்கை கடற்பரப்பிற்கு வந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

தனித்தனியாக, 9,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எட்டு மாவட்டங்களில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்குவதற்காக உர இருப்புக்களை வழங்கியுள்ளது.

இதேவேளை மியூரேட் ஆஃப் பொட்டாஷ் உரம் திங்கட்கிழமைமுதல் விநியோகிக்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யூரியா உர மூடை ரூ.10,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு மூடை மியூரேட் ஆஃப் பொட்டாஷ் உரம் ரூ.19,500க்கு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வீதம், பெரும் போகத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: