யுத்தம் காரணமாக அதிகளவான  பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர் :வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே

Wednesday, March 30th, 2016

யுத்தத்தால் அதிகளவான  பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர். இதன் காரணமாக பெண்கள் விதவைகளாக்கப்பட்டது மட்டுமன்றி. பெண்களுக்குப் பிள்ளைகள் இல்லாமல் போனமையுடன்  பெண்களுக்குப் பாதுகாப்பு மற்றும்   வாழ்வாதாரங்களும் இல்லாமல் போனது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.

சர்வோதய அமைப்பின் ஒரு அங்கமான தேசிய தேசோதய சபையின் சர்வதேச மகளிர் தின விழா நேற்று  (29) காலை யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள தியாகி அறக் கொடை நிலையத்தில் இடம்பெற்றது. இதில் விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

யுத்தம் காரணமாகப் பெண்கள் மீது தங்களது பிள்ளைகளைத் தனித்து  வளர்த்தாளாக்கும் பாரிய பொறுப்பும்  சுமத்தப்பட்டது. இதனால் அனைவரும் ஒன்றாகப்  பெண்களின் உரிமைகளுக்காகக்  கைகொடுக்க வேண்டும். இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்த சர்வோதய அமைப்பிற்கு நான் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

தாய்ப் பால் இரத்தத்திலிருந்து வருகின்றது. வீட்டிலிருக்கும் தெய்வம் அம்மா என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறான பெண்களை அடிமைகளாக வைத்திருக்கின்றார்கள். இந்த மாதிரியான செயற்பாடுகள்  நியாயமில்லாதது எனவும் தெரிவித்தார்.

இந்த விழாவில் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் அ .நடராஜன் மற்று யாழ். மாவட்ட(காணி ) மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் தெரிவு செய்யப்பட்ட பெண் முயற்சியாளர்கள்,  சாதனையாளர்கள் கெளரவிப்பும் நடைபெற்றது

Related posts: