கட்டுநாயக்கவில் ஒரு மில்லியன் பெறுமதியான சிகரட் பொதிகளுடன் ஒருவர் கைது!
Wednesday, September 7th, 2016
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருமில்லியன் பெறுமதியான சிகரட் பக்கட்டுகளுடன் 28 வயதான இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று (07) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 27600 சிகரட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
குறித்த நபர் டுபாயிலிருந்து ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL – 226 விமானத்தில் இலங்கை வந்துள்ளார். கைதுசெய்யப்பட்டவருக்கு 1 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளை மதுபான நிலையங்களுக்கு பூட்டு!
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 36 பேருடைய சடலங்கள் வெளிமாவட்டத்தில் தகனம் – பணிப்பாளர...
யாழ்ப்பாண நகரப் பகுதியில் மலேரியாவை பரப்ப கூடிய நுளம்பு கண்டுபிடிக்கப்பட்டமை அபாயகரமானது - வட மாகாண ...
|
|
|


