யாழ் A-09 வீதியில் கூட்டத்திற்கு தடை!
Saturday, February 4th, 2017
இன்றையதினம் யாழ். அரச அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக A-09 வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இக்கூட்டம் தொடர்பில் யாழ். தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டியிருந்தார்.
இன்றைய தினம் கடற்தொழிலாளர்களின் கூட்டம் இடம்பெறும் பட்சத்தில் பொது மக்களுக்கும், அரச சொத்துக்களுக்கும் பொது அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும். என்பதன் காரணமாகவே யாழ். நீதிமன்ற நீதவான் சதீஸ்தரன் இக்கூட்டத்திற்கு தடை விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
கொள்ளையர்களின் இலக்கு பெண்கள் வயோதிபர்களே!
எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையே மீண்டும் இரவு நேர தபால் ரயில் சேவ...
சேவை மூப்பு பாதிக்கப்படாத வகையில் ஓய்வூதியத்துக்கு உரித்தான அரச ஊழியர்களுக்கு ஐந்து வருட சம்பளமற்ற வ...
|
|
|


