யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர் மீது செயலக வாசலில் வைத்து வாள்வெட்டு!
Wednesday, July 8th, 2020
யாழ் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது மாவட்ட செயலக வாசலில் வைத்து வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது- யாழ் மாவட்ட செயலகத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் தனது கடமைக்காக மாவட்ட செயலகத்திற்கு வந்து கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த இரு நபர்கள் அவரை மாவட்ட செயலக வாசலில் வைத்து வாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த உத்தியோகத்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் மாவட்டத்தை சுற்றி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசாங்க ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திய 2019!
நாடாளுமன்றத் தேர்தலில் மனித உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மனித உரிமை...
சமுர்த்தி பதிவுகளில் முறைகேடு இடம்பெற்றிருந்தால் மேன்முறையீடுகளை ஜூன் 10 ஆம் திகதி வரை அனுப்பி வைக்...
|
|
|


