யாழ். மாவட்டத்தில் தேங்காய் விலையில் திடீர் வீழ்ச்சி
Sunday, July 16th, 2017
யாழ். மாவட்டத்தில் தேங்காய் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 70 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட தேங்காயொன்று இன்றைய தினம் 55 ரூபா முதல் 60 ரூபாவாகவும், 60 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நடுத்தரத் தேங்காய் 45 ரூபாவாகவும், 40 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட சிறிய தேங்காய் 30 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது தேங்காய் சீசன் காலமாகையால் யாழ்ப்பாணத்தின் கொடிகாமம், பளை போன்ற இடங்களிலிருந்தும், புத்தளம், குருநாகல் போன்ற மாவட்டங்களிலிருந்தும் குடாநாட் டின் சந்தைகளிற்குத் தேங்காய்களின் வரத்துக் கடந்த சில தினங்களாக அதிகரித்துக் காணப்படுகின்றது.
தேங்காய்களின் வரத்து அதிகரித்துள்ள போதிலும் தேங்காய்களின் விலைகளில் முன்னைய காலங்கள் போன்று பெரும் வீழ்ச்சி ஏற்படவில்லை.
யாழ். குடாநாட்டிலிருந்து பெருமளவு தேங்காய்கள் வெளிமாவட்டங்களிற்கு ஏற்றுமதியாகின்றமையே இதற்கான காரணமென வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.
Related posts:
மே தினத்தன்று அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகள் பஸ்களுக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது!
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா உயிரிழப்புக்கள் - எச்சரிக்கும் சுகாதார தரப்பு!
வேலணையில் தரம் 6 புதுமுக மாணவர்களை ஊக்குவிக்க கொழும்பு லயன்ஸ் கழகம் விசேட நடவடிக்கை!
|
|
|


