யாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது!

Wednesday, February 20th, 2019

யாழ்ப்பாண மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்காகக் குறைந்து காணப்படுவதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

இந்தத் தொழிலை அநேகமானோர் சமூகம் சார்ந்து பார்க்கப்பட்டமையாலும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடையக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் போருக்கு முன்னரான காலப்பகுதியில் சுமார் 25 ஆயிரம் பேர் சீவல் தொழிலில் ஈடுபட்டனர்.

கள்ளு மற்றும் பதநீருக்கான விலைகளும் வரையறை செய்யப்பட்டு அவை பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களால் கொள்வனவு செய்யப்பட்டது.

தற்போது இந்த தொழிலை அநேகமானோர் சமூகம் சார்ந்து பார்ப்பதாலும் அடுத்த சந்ததிக்கு அதாவது பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்கு அந்த தொழிலை கற்றுக்கொடுக்க முன் வராமையாலும் சீவல் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது சுமார் 6 ஆயிரம் பேர் வரையிலே சீவல் தொழிலை மேற்கொள்ளுகின்றனர்.

பனை சார்ந்த அபிவிருத்தி வேலைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 19 கூட்டுறவுச் சங்கங்கள், மூன்று கொத்தணிகள், ஒரு சமாசம் யாழ்ப்பாணத்தில் உள்ளன.

அவை தமது வேலைகளை செய்தாலும் பனை மரங்களில் ஏறுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. தற்போது ஒருவர் பனை மீது ஏறித் தான் ஆக வேண்டும் அப்போது தான் பனை சார்ந்த உற்பத்தி நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.

பனை ஏறுவதற்கு வேறு இடங்களில் என்ன தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பது தொடர்பில் ஆராய்ந்து தற்போது தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அதனை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: