பணிப்புறக்கணிப்பிலிருந்து ரயில்வே தொழிற்சங்கங்கள் விலகல்!

Wednesday, July 3rd, 2019

தமது சம்பள முறைப்பாடுகள் தொடர்பில் அரசினால் தீர்மானம் ஒன்று எட்டப்படும் வரையில் ஒவ்வொரு வாரமும் மேற்கொள்வதாக இருந்த ரயில்வே பணிப்புறக்கணிப்பு நிலைப்பாடு மாற்றப்பட்டு, சட்ட ஆலோசனைகளுக்கு அமைய பணிப்புறக்கணிப்பில் இருந்து விலகிக் கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், ஊழியர்களது உரிமைகளை கட்டுப்படுத்தி ரயில்வே சேவையினை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்திய நிலையில், எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் இடையே இன்று(03) காலை 10.00 மணிக்கு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Related posts:


மகாவலியை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் :  ஆனால் நில அபகரிப்பை எதிர்ப்போம்  - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்...
காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 மில்லியன் டொலரை திரட்டும் ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அ...
வெப்பமான காலநிலை - பாடசாலைகளில் வெளிப்புற நடவடிக்கைகளின் போது மாணவர்கள் அதிகளவில் தண்ணீர் அருந்த வேண...