யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த கிராமசேவகர் பிரிவுரீதியாக அலுவலர் ஒருவர் நியமனம்!

Friday, July 10th, 2020

யாழ்.மாவட்டத்தில் வன்செயல்கள், போதைப்பொருள் கடத்தல்கள், இயற்கை வளங்களை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இவ்வாறான சமூக விரோத குற்றங்கள் இடம்பெறும் பகுதிகளில் கிராமசேவகர் பிரிவுரீதியாக அலுவலர் ஒருவர் நியமனம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் கிராமமட்டத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பாக அவதானம் செலுத்துவதுடன், அவர்கள் ஊடாக பொலிஸாருக்கு குற்றவாளிகள் பாரப்படுத்தப்படுவர்.

நியமிக்கப்பட்ட அலுவலகரின் பொறுப்புத் தொடர்பில் தற்போது பொதுமக்களுக்கு தெளிவூட்டப்பட்டு வருகிறது.

மேலும் கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்கள், போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் நுகர்வு உள்ளிட்டவை தொடர்பில் முதலில் அந்தப் பிரிவுக்குப் பொறுப்பான அலுவலகருக்கு தெரியப்படுத்த வேண்டும்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: