யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீள்சுழற்சிக்கான கழிவு சேமிப்பு நிலையங்கள் விஸ்தரிப்பு!

Saturday, July 23rd, 2016

யாழ். மாநகர சபையின் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் கழிவுகளைச் சிரமமின்றி அகற்றுவதற்கு வசதியாகப் பல்வேறு இடங்களிலும் கழிவு சேகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக  யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மீள் சுழற்சியின் கீழ் வுக்கும் மற்றும் உக்காந்தா பொருட்களை சேர்க்கக் கூடிய வகையில் இந்தக் கழிவு சேகரிப்புப் பெட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கழிவு சேகரிப்புப் பெட்டிகள் பரவலாக யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியின் முக்கிய இடங்களில் வைக்கப்படும்.

ஏற்கனவே இந்தக் கழிவு சேகரிப்புப் பெட்டிகளில் அதிகளவு கழிவுகளை மக்கள் சேகரித்து வருகின்றனர். பொலித்தீன் மற்றும் உக்கும், உக்காத கழிவுகள் இந்தப் பெட்டிகள் ஊடாக அதிகளவில் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: