யாழ் மாநகரின் முன்னாள் ஆணையாளரது ஊழலும் அம்பலப்படுத்தப்பட வேண்டும் – றெமீடியஸ்!
Wednesday, April 11th, 2018
கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டுமல்லாது அதற்கு முன்னரான ஆட்சிக்காலத்திலும் நடைபெற்ற ஊழல்களையும் அப்போதைய யாழ் மாநகர சபை ஆணையாளர்கள் மேற்கொண்ட ஊழல்களையும் விசாரணை செய்து உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகர சபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான றெமீடியஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் மாநகரசபையின் புதிய ஆட்சிக்கான கன்னி அமர்வு இன்றையதினம் முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் கூடியது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்ததுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆட்சியில் நடைபெற்றதாக வெறும் அரசியல் காரணங்களுக்காக கூறப்படும் ஊழல் விடயங்களை மட்டுமல்லாது அதற்கு முன்னர் ஆட்சி செய்தவர்களது ஊழல்களும் அப்போதைய யாழ் மாநகர சபையின் ஆணையாளராக இருந்த ஒருவரது தலைமையில் 6 கடைத்தொகுதி கட்டப்பட்டதில் நடைபெற்ற மிகப்பெரும் ஊழலையும் விசாரணை செய்து அவற்றின் உண்மைகளையும் வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதே எனது இன்றைய கன்னி அமர்வின் முதல் கோரிக்கையாக உள்ளது.
அத்துடன் யாழ் மாநகரை அண்டியுள்ள நினைவுச்சின்னங்கள் மற்றும் வரலாற்று இடங்கள் மீள் புத்தாக்கம் செய்யப்டுவதுடன் யாழ் மாநகரின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என்றும் அவர் தனது கன்னியுரையில் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


